×

திருப்பத்தூர் மாவட்டம் அருகே 17-ம் நூற்றாண்டின் நிலக்கொடை கல்வெட்டு கண்டெடுப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அங்கநாதீஸ்வரர் கோயிலுக்கான நிலக்கொடைக் கல்வெட்டு ஒன்று கண்டுடெடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆவணப்படுத்தப்படாத எண்ணற்ற புதிய வரலாற்றுத் தடயங்களைத் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறை ஆய்வு குழுவினர் கள ஆய்வுகள் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கோயம்புத்தூர் ‘யாக்கை’ அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது.அதன் தொடர்ச்சியாக திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் ஆய்வு குழுவினர் மற்றும் சமூக ஆர்வலர் ராதா கிருஷ்ணன் அளித்த தகவலின் அடிப்படையில் திருப்பத்தூர் அடுத்த சோமலாபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் ஒரு கல்வெட்டு இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். திருப்பத்தூர் மாவட்டத்தின் முற்கால வரலாறுகளை ஆராயும் எங்கள் பணியில் தற்போது “யாக்கை” அறக்கட்டளை குழுவினரும் இணைந்துள்ளனர். அவர்களோடு மேற்கொண்ட கள ஆய்வில் இந்தக் தகல்வெட்டு கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக ஆராயந்தபோது, இக்கல்வெட்டானது ஐந்தரை அடி நீளமும் மூனறரை அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லால் வடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டில் 17 வரிகள் எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டுச் செய்திகள் தமிழும், கிரந்தமும் சில இடங்களில் வடமொழியும் கலந்து எழுதப்பட்டுள்ளன. திறந்த வெளியில் பல்லாண்டுகளாக பாதுகாப்பற்ற சூழலில் கிடந்ததால் கல்வெட்டு உராய்ந்து எழுத்துகள் மங்கிய நிலையில் காணப்படுகின்றன.

எனவே, கல்வெட்டினை மாவுப் பூச்சு வாயிலாகப் படி எடுக்கப்பட்டு குழுவினரால் படிக்கப்பட்டது. கல்வெட்டின் பல இடங்களில் எழுத்துகள் படிக்க இயலாத நிலையில், எந்த மன்னனின் ஆட்சிக் காலத்தில் இந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டது என்பதைக் கண்டறிய முடியவில்லை. இருந்தாலும் எழுத்துகளின் அமைப்பைக் கருதி, இந்த கல்வெட்டானது 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதை அறியமுடிகிறது.

 

 

The post திருப்பத்தூர் மாவட்டம் அருகே 17-ம் நூற்றாண்டின் நிலக்கொடை கல்வெட்டு கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Thirupattur District ,Tirupattur ,Ankanadeswarar ,Tirupathur ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டத்தில் காலை 9...