×

நடிகை திவ்யா ஸ்பந்தனா ஜெனீவாவில் நலமுடன் உள்ளார்: அவரது தோழி சமூக வலைதளத்தில் தகவல்

பெங்களூர்: நடிகை திவ்யா ஸ்பந்தனா ஜெனீவாவில் உடல்நலத்துடன் உள்ளதாக அவரது தோழி சமூக வலைதளத்தில் தகவல் தெரிவித்துள்ளார். திவ்யா ஸ்பந்தனா நலமுடன் உள்ளார் நாளை பெங்களூரு திரும்புவார் என அவரது தோழி தகவல் தெரிவித்தார்.

தமிழில் இயக்குனர் வெங்கடேஷ் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான குத்து படத்தில் நடிகை திவ்யா ஸ்பந்தனா அறிமுகமானார். இதையடுத்து நடிகர் அர்ஜூனுடன் கிரி படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். வாரணம் ஆயிரம், பொல்லாதவன், சிங்கம் புலி ஆகிய திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார்.

ஏராளமான கன்னட படங்களில் நடித்துவரும் நடிகை திவ்யா ஸ்பந்தனா, அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.  இதையடுத்து இவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக சமுக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நடிகை திவ்யா ஸ்பந்தனா ஜெனீவாவில் நலமுடன் உள்ளதாகவும் நாளை பெங்களூரு திரும்புவார் எனவும் அவரது தோழி சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் நடிகை திவ்யா ஸ்பந்தனா தொடர்பான பரபரப்பு சற்று தணிந்துள்ளது.

The post நடிகை திவ்யா ஸ்பந்தனா ஜெனீவாவில் நலமுடன் உள்ளார்: அவரது தோழி சமூக வலைதளத்தில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Divya Spandana ,Geneva ,Bangalore ,Divya Spandana… ,
× RELATED ராமநகர மாவட்டம் இனி பெங்களூரு தெற்கு!!!