×

சந்திரயான்-3 லேண்டரின் இருப்பிட புகைப்படத்தை வெளியிட்டுள்ளது நாசாவின் லூனார் ஆர்பிட்டர்..!!

ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான்-3 லேண்டரின் இருப்பிட புகைப்படத்தை நாசாவின் லூனார் ஆர்பிட்டர் வெளியிட்டுள்ளது. சந்திரயான் 1, சந்திரயான் 2 ஆகிய திட்டங்களை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் நிலவின் இருண்ட பகுதியான தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து சந்திரயான் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் 3 விண்கலம் 5 முறை பூமியின் நீள் வட்டப் பாதையில் சுற்றி, அதன் பின்னர் நிலவின் ஆர்பிட்டுக்குள் நுழைந்து பல நாட்கள் நீள் வட்டப்பாதையில் சுற்றியது.

கடந்த ஆகஸ்டு 23ம் தேதி மாலை அது வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியாகி ஆய்வை தொடங்கி உள்ளது. குண்டு குழியுமான நிலவின் மேற்பரப்பு, விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் என அனைத்தையும் புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பிரக்யான் ரோவர் பதிவு செய்து இஸ்ரோவுக்கு அனுப்பி வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் நிலவில் ஹீலியம், சல்பர் உள்ளிட்ட பல்வேறு கனிமங்கள் இருப்பதையும் பிரக்யான் ரோவர் கண்டிபிடித்தது.

சந்திரயான் 3 விண்கலம் எந்த நோக்கத்திற்காக அனுப்பப்பட்டதோ, அதை நிறைவு செய்து 100 சதவீதம் இதில் வெற்றிபெற்றுவிட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்நிலையில், சந்திரயான்-3 லேண்டரின் இருப்பிட புகைப்படத்தை நாசாவின் லூனார் ஆர்பிட்டர் வெளியிட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தில் இருந்து 600கி.மீ. தொலைவில் சந்திரயான்-3 நிலை கொண்டுள்ள நிலையில் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. சந்திரயான் லேண்டர் பாதிக்கப்படுகிறதா என்பதை அறிய ஆர்பிட்டர்கள் புகைப்படம் எடுத்து அனுப்புகிறது.

The post சந்திரயான்-3 லேண்டரின் இருப்பிட புகைப்படத்தை வெளியிட்டுள்ளது நாசாவின் லூனார் ஆர்பிட்டர்..!! appeared first on Dinakaran.

Tags : NASA ,Chandrayaan-3 Lander ,Sriharikota ,Chandrayaan 1 ,Chandrayaan 2 ,
× RELATED ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்