×

பன்னாட்டு கருத்தரங்கம்

ஆண்டிபட்டி, செப். 6: தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிணி பயன்பாட்டியல் துறையின் சார்பில் டேட்டா சயின்ஸ் என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார்.

உபதலைவர் கணேசன், பொதுச் செயலாளர் ஆனந்தவேல் மற்றும் பொருளாளர் பழனியப்பன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். துறைத்தலைவர் உமா வரவேற்றார். நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலாளர் காசிபிரபு துவக்கயுரையாற்றினார். கல்லூரியின் இணைச் செயலாளர்கள் செண்பகராஜன் மற்றும் அருண் மற்றும் கல்லூரிமுதல்வர் சித்ரா மற்றும் துணை முதல்வர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

The post பன்னாட்டு கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : Antipatti ,Department of Computer Applications ,Theni Nadar Saraswati College of Arts and Sciences ,Dinakaran ,
× RELATED ஆண்டிபட்டியில் ஆச்சர்யம் வெள்ள காக்கா பறக்குது பாரு…