×

ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்

சேந்தமங்கலம், செ.6: சேந்தமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு அட்மா குழு தலைவர் அசோக்குமார் தலைமை விகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் சுமதி வரவேற்றார். இதில் பொன்னுசாமி எம்எல்ஏ கலந்து கொண்டு பள்ளியில் பணியாற்றி ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு, சான்றிதழ் ஆதரவற்ற மாணவிக்கு நிதி உதவி வழங்கி பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் கலந்துகொண்டு பொதுத்தேர்வை எதிர்கொள்வது, தேர்வு பயம் போக்குதல், ஆசிரியர்களை மதித்தல் உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை மாணவிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் எல்ஐசி பொது மேலாளர் செல்லம், நகர திமுக செயலாளர் தனபாலன், உதவி தலைமை ஆசிரியர்கள் வெங்கடாஜலம், ரங்கநாயகி, தமிழ் ஆசிரியர் மாதேஸ்வரன், ஆங்கில ஆசிரியர் ஆர்த்தி, வார்டு கவுன்சிலர் முகமது ரபீக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Teacher's Day ,Senthamangalam ,Senthamangalam Government ,Girls Higher Secondary ,School ,Atma ,Teacher's Day Celebration ,Dinakaran ,
× RELATED அரளிப்பூ விளைச்சல் அமோகம்