பந்தலூர், செப்.6: பந்தலூரில் தொடர் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை கடந்த ஜீலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்யாமல் கடும் வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் ஆறுகள் மற்றும் நீர் நிலைகள் அனைத்தும் வற்றி காணப்பட்டது. நவம்பர், டிசம்பர் மாதங்களிலேயே குடிநீர் தட்டுப்பாடுகள் ஏற்படும் என பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை காணப்படுகிறது. நேற்று மதியம் பந்தலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் மேக மூட்டத்துடன் கூடிய மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கினர்.
The post தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.
