×

காவல் நிலையங்களில் உள்ள இருப்பு சாட்சியை குற்ற வழக்குகளில் பயன்படுத்தாமல் தடுக்க நடவடிக்கை: கமிஷனருக்கு கோர்ட் உத்தரவு

சென்னை: திருவொற்றியூர் காவல் நிலையத்தின் முதல் நிலை காவலர் செல்வகுமார், கடந்த 2015ம் ஆண்டு வண்ணாரப்பேட்டை பகுதியில் கடைக்கு பால் வாங்க சென்ற போது வாசுதேவன், சரண்ராஜ், ரமேஷ், சண்முகம் ஆகிய 4 பேர், உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை தாக்கியதாக புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஜார்ஜ் டவுன் 15வது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முரளி கிருஷ்ணன் ஆனந்தன், இந்த வழக்கில் இருப்பு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறியுள்ளனர். அவர்களிடம் குறுக்கு விசாரணை செய்யப்பட்டபோது காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளிவராத பல சம்பவங்கள் வெளி வந்துள்ளது.  காவல் நிலையத்தில் இருப்பு சாட்சிகளை வைத்திருக்கும் சம்பவங்களும், அவர்களை எவ்வாறு விசாரணைக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதையும் இந்த வழக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்ட சாட்சிகள் முழுமையாக இல்லை. காவல் நிலையங்களில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பணியாற்றும் பணியாளர்கள் சிலர் இருப்பு சாட்சிகளாக பயன்படுத்தப்படுகிறார்கள். இது போன்ற சில கசப்பான சம்பவங்கள் தொடர்ச்சியாக  நடைபெற்று வருகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் குற்றம் சாட்டபட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள். எனவே, காவல் நிலையங்களில் உள்ள இருப்பு சாட்சிகளை, குற்ற வழக்கு விசாரணைக்கு பயன்படுத்த கூடாது என்பதற்கான உறுதியான சில  நடவடிக்கையை சென்னை மாநகர காவல் ஆணையர் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்….

The post காவல் நிலையங்களில் உள்ள இருப்பு சாட்சியை குற்ற வழக்குகளில் பயன்படுத்தாமல் தடுக்க நடவடிக்கை: கமிஷனருக்கு கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Selvakumar ,Thiruvatteur police station ,Vanarapet ,Dinakaran ,
× RELATED சாரம் சரிந்து தொழிலாளி பலி தனியார்...