×

டெங்கு அலட்சியத்திற்கு அபராதம் தஞ்சை வெண்ணாற்றங்கரையில் காகித விநாயகர் சிலைகள் விற்பனை

தஞ்சாவூர், செப்.6: தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரையில் காகித கூழால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளுள் ஒன்று விநாயகர் சதுர்த்தி விழா. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு ஒரு மாதத்துக்கு முன்னரே விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெறும். ஆனால் தற்போது விநாயகர் சிலைகள் செய்வதற்கான மூலப்பொருட்கள் விலையேற்றம் காரணமாக பல்வேறு இடங்களில் தயாரிக்கப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டது. ஒரு சில இடங்களில் மட்டும் தயார் செய்யப்பட்டு பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

அதன்படி காஞ்சிபுரத்தில் விற்பனை செய்யப்படும் விநாயகர் சிலைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. அதன்படி தஞ்சைக்கு விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதில் 1 அடி முதல் 7 அடி உயரம் விரையிலான வட இந்திய விநாயகர் சிலைகள், ராஜ கணபதி, சிம்ம வாகனம், பசு வாகனம், மான் மற்றும் பசு வாகனம், யானை வாகரம், அன்ன பட்சி வாகனம், மாடு மற்றும் எலி வாகனம், தாரை விநாயகர் போன்ற விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த சிலைகள் அனைத்தும் காகித கூழால் தயாரிக்கப்பட்டு, ரசாய கலவை இல்லாத வர்ணம் பூசப்பட்டு விற்பனைக்கு கொண்டு வந்துள்ளன. தஞ்சை பள்ளிஅக்ரகாரம் வெண்ணாற்றரையில் உள்ள ஆந்தவல்லியம்மன் கோவிவல் தெருவில் இந்த சிலைகள் விறப்னைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் ரூ.100 முதல் ரூ.18 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து சிலைகள் விற்பனை செய்து வரும் பூங்குழலி சண்முகம் கூறுகையில்,
நாங்கள் சுய உதவிக்குழுக்கள் மூலம் விநாயகர் சிலைகளை தயார் செய்து முன்பு விற்பனை செய்து வந்தோம். அதன் பின்னர் வெளியூர்களில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். தற்போது மூலப்பொருட்கள் விலை உயர்ந்து விட்டது. இதனால் சிலை கொள்முதல், லாரி வாடகை என தற்போது சிலைகளின் விலை கணிசமாக உயர்ந்து விட்டது. கொரோனா காரணமாக 3 ஆண்டுகள் விற்பனை நடைபெறவில்லை. கடந்த ஆண்டு முதல் மீண்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து கும்பகோணம், நாகப்பட்டினம், பேராவூரணி, வல்லம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து சிலைகளை வாங்கி செல்வார்கள். என்றார்.

The post டெங்கு அலட்சியத்திற்கு அபராதம் தஞ்சை வெண்ணாற்றங்கரையில் காகித விநாயகர் சிலைகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Ganesha ,Tanjore's ,Vennarangarai ,Thanjavur ,Hindus ,
× RELATED திருவள்ளூர் அடுத்த மப்பேடு அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை