×

குன்னம் அருகே கல்லை கிராமத்தில்

குன்னம், செப்.6: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், கல்லை கிராமத்திலிருந்து குன்னம், வேப்பூர் வழியாக கிரவல் மண் லோடு தினமும் இரவு நேரத்தில் பல்வேறு இடத்திற்கு லாரிகளில் எடுத்து செல்லப்படுகிறது. இரவு நேரங்களில் அதிவேகமாக செல்வதால் பல்வேறு விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது. நேற்று அதிகாலை அதிவேகமாக சென்ற டாரஸ் டிப்பர் லாரி கல்லை பொன்னேரி குளம் பகுதியில் ஓட்டுனரின் கவனக்குறைவால் டாரஸ் லாரி சாலையின் ஓரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கல்லை பொன்னேரி குளம் சாலை வளைவில் அடிக்கடி மிக கோரமான விபத்துக்கள் நடந்து கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் பகுதியில் சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு தேவையான சுண்ணாம்பு கல் லாரி மற்றும் கிராவல் மண் லாரிகள் இந்த பகுதியில் அதிவேகமாக செல்வதால் பல்வேறு விபத்துகள் நடைபெறுகிறது. எனவே மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குன்னம் அருகே கல்லை கிராமத்தில் appeared first on Dinakaran.

Tags : Kallai village ,Gunnam ,Perambalur district ,Kallai ,Veypur ,Dinakaran ,
× RELATED குன்னத்தில் வாய்த்தகராறில் தந்தையை கீழே தள்ளி கொலை செய்த மகன் கைது