திருவள்ளூர்: திருவள்ளூரில் அரசு பள்ளி மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. திருவள்ளூர், ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு உங்கள் பாதுகாப்பு டிரஸ்ட் மற்றும் பல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மோட்டார் வாகன ஆய்வாளர் கோ.மோகன் தலைமை தாங்கினார். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை செல்வி அனைவரையும் வரவேற்றார்.
இந்த சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற நீதிபதி செல்வகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து விளக்க உரையாற்றினார். மேலும், இதில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் சா.வில்சன் ராஜ்குமார், மின்சார வாரிய உதவி பொறியாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசினர்.
The post அரசு பள்ளி மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.
