
- கிருஷ்ணசாமி
- சட்டமன்ற உறுப்பினர்
- வெங்கல்
- குருவாயல்
- புதுக்கோட்டை
- தமிழ்நாடு அரசு
- வெங்கலமும் குருவாயல் உயர்நிலைப் பள்ளி
- அகில புரம் ஒன்றியம்
- கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.
ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கல் மற்றும் குருவாயல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ வழங்கினார். பெரியபாளையம் அருகே எல்லாபுரம் மத்திய ஒன்றியம் வெங்கல் மற்றும் குருவாயல் கிராமங்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தலைமையாசிரியர்கள் செந்தில்குமார், ஸ்டெல்லா கிறிஸ்டி பாய் ஆகியோர் தலைமை தாங்கினர்.
எல்லாபுரம் திமுக மத்திய ஒன்றியச் செயலாளர் தங்கம் முரளி, மாவட்ட துணைச் செயலாளர் சீனிவாசன், கோடுவெளி குமார், பாஸ்கர், அவைத்தலைவர் முனுசாமி, அன்பு, பாஸ்கர், ஊராட்சி செயலாளர் நாகலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி கலந்து கொண்டு வெங்கல் மற்றும் குருவாயல் பள்ளிகளைச் சேர்ந்த 272 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
மேலும், பள்ளிகளில் வகுப்பறைகள் பற்றாக்குறையாக இருப்பதாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதால், விரைவில் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றார். இறுதியில் துணை தலைமையாசிரியர்கள் சரவணன், பரமானந்தம் நன்றி கூறினர்.
The post வெங்கல், குருவாயல் கிராமங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்: கிருஷ்ணசாமி எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.