×

டிஜிட்டல் கரன்சி விரிவாக்கம் ரிசர்வ் வங்கி திட்டம்

புதுடெல்லி: இந்தியாவில் டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி அறிமுகப்படுத்தியது. சோதனை அடிப்படையில் டிஜிட்டல் கரன்சியை மும்பை, டெல்லி, பெங்களூரு, புவனேஸ்வரம் உள்ளிட்ட 4 நகரங்களில் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 9 வங்கிகள் வெளியிட்டன. அரசின் பங்கு பத்திரங்களில் பரிமாற்றம் செய்ய டிஜிட்டல் கரன்சி பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில், இதன் அடுத்த கட்டமாக வங்கிகளுக்குள் கடன் பரிவர்த்தனைகளுக்கு டிஜிட்டல் கரன்சி பயன்பாட்டை விரிவுபடுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. சோதனை முயற்சி வெற்றிகரமாக நடந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக ரிசர்வ் வங்கி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post டிஜிட்டல் கரன்சி விரிவாக்கம் ரிசர்வ் வங்கி திட்டம் appeared first on Dinakaran.

Tags : RBI ,New Delhi ,India ,Dinakaran ,
× RELATED தனியார் நிதி நிறுவனங்களிடம் முதலீடு...