×

விசுவாசபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்

நாகர்கோவில், செப். 6: விசுவாசபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் லயோலா கல்லூரி மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் மரம் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள், பறவைகள், விலங்கினங்கள், மனிதர்களுக்கு மரம் எவ்வாறெல்லாம் பயன்படுகிறது என்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் மரம் வளர்ப்பதால் சுற்றுச்சூழலை எவ்வாறு காக்கிறது, மண்வளத்தை எவ்வாறு பேணி பாதுகாக்கிறது, கடல் அரிப்பை தடுக்க என்னென்ன மரங்கள் வளர்க்க வேண்டும் என்பது உள்பட பல தகவல்களை மாணவர்களுக்கு எடுத்துக் கூறி மரம் வளர்ப்பது பற்றிய விழிப்புணர்வை லயோலா கல்லூரி மாணவர்கள் ஏற்படுத்தினர். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டனர். தலைமை ஆசிரியை உதயகுமாரி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post விசுவாசபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் appeared first on Dinakaran.

Tags : Welfare Project ,Vishwapuram ,Govt. Primary School ,Nagercoil ,Loyola College Students ,National Welfare ,Program Camp ,Vishwapuram Government Primary School ,Visyapuram Government Primary School ,Dinakaran ,
× RELATED வேளாண் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்