×

புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் தின கொண்டாட்டம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சுற்று வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி, கரும்புகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவிற்கு ஒன்றிய கவுன்சிலர் ஏ.மதன்மோகன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் வி.எம்.சீனிவாசன் முன்னிலை வகித்தார்.

இதில், மேற்கண்ட 3 பள்ளிகளில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி காவல் நிலைய ஆய்வாளர் வடிவேல் முருகன், புதுகும்மிடிப்பூண்டி முன்னாள் ஊராட்சி தலைவர் மா.செல்வராஜ் பங்கேற்றனர். பின்னர், ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, ஆசிரியர் பணியில் சிறப்பு குறித்து எடுத்துரைத்து, 100 ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு சால்வை அணிவித்தும் நினைவு பரிசளித்தனர்.
இந்த விழாவில், அரிமா சங்க நிர்வாகி அண்ணாமலை, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வெங்கடேசன். சமூக ஆர்வலர்கள் வி.ஹேமகுமார், பி.நாகராஜ், ஜி.உதயா, ஆர்.உதயா, சரவணன் பங்கேற்றனர்.

 

The post புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் தின கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Teacher's Day ,Buddhummippundi Puradakshi ,Gummhipundi ,Gummipundi ,Ugummipoondipundi ,Puravasi ,
× RELATED சென்னை பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான...