×

வாலிபருக்கு கத்திக்குத்து நீதிமன்றத்தில் 2 பேர் சரண்

பெரம்பூர்: வியாசர்பாடி கக்கன்ஜி காலனியை சேர்ந்தவர் ஜீவானந்தம் (38), பிளம்பர். இவர் கடந்த 2 தினங்களுக்கு முன் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர், இவரை சரமாரியாக கத்தியால் வெட்டினர் இதில், ஜீவானந்தம் படுகாயமடைந்தார். இதை பார்த்த அப்பகுதியினர் அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் தொடர்பாக செம்பியம் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில், அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவியிடம் ஜீவானந்தம் பேசி வந்துள்ளார். சரவணன் இதனை பலமுறை கண்டித்தும் ஜீவானந்தம் கேட்கவில்லை. இதன் காரணமாக சரவணன் அவரது நண்பர் அபினாசுடன் சேர்ந்து கத்தியால் வெட்டியது தெரிய வந்தது. இதனையடுத்து சரவணன், அபினாஷ் ஆகிய இருவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வியாசர்பாடி கக்கன்ஜி காலனியை சேர்ந்த அபி என்கின்ற அபினாஷ் (21) சரவணன் (32) ஆகிய இருவரும் சரணடைந்தனர். இதையடுத்து, அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். செம்பியம் போலீசார் விரைவில் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.

The post வாலிபருக்கு கத்திக்குத்து நீதிமன்றத்தில் 2 பேர் சரண் appeared first on Dinakaran.

Tags : Perambur ,Jeevanandham ,Vyasarpadi Kakanji Colony ,Dinakaran ,
× RELATED வெடித்து சிதறிய மின்பெட்டி