×

வெண்டைக்காய் பச்சடி

தேவையானவை:

புளிக்காத புது தயிர் – 1 கப்,
வெண்டைக்காய் – 100 கிராம்,
தேங்காய் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2, உப்பு – தேவைக்கு.

தாளிக்க:

கடுகு – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

வெண்டைக் காயை கழுவித் துடைத்து, சிறு துண்டுகளாக நறுக்குங்கள். எண்ணெயைக் காய வைத்து, நறுக்கிய வெண்டைக் காயை அதில் போட்டு, நன்கு பொரித்தெடுங்கள்.தேங்காய், பச்சை மிளகாயை அரைத்து தயிரில் சேருங்கள். கடுகையும் பொரித்து சேருங்கள். அத்துடன் உப்பையும் சேர்த்து கலந்து வையுங்கள். பரிமாறுவதற்கு சற்று முன்பு, பொரித்த வெண்டைக் காயைத் தயிர்க் கலவையில் சேர்த்து பரிமாறுங்கள். மிக ருசியான தயிர் பச்சடி இது.

The post வெண்டைக்காய் பச்சடி appeared first on Dinakaran.

Tags :
× RELATED செட்டிநாடு நண்டு குழம்பு