×

யுஎஸ் ஓபன் டென்னிஸ் மெட்வெடேவ், மார்கெட்டா கால் இறுதிக்கு தகுதி

நியூயார்க்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில், 4வது சுற்றில் 3ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டைச் சேர்ந்த மேடிசன் கீசுடன் மோதினார். இதில் 6-1, 6-3 என மேடிசன் கீஸ் வெற்றி பெற்று கால்இறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு போட்டியில், செக் குடியரசின் மார்கெட்டா வோண்ட்ரூசோவா, 6-7, 6-2, 6-2 என அமெரிக்காவின் பெய்டன் ஸ்டெர்ன்சை வென்றார். 5ம் நிலை வீராங்கனையான துனிசியாவின் ஓன்ஸ் ஜபீர் 2-6, 4-6 என சீனாவின்கின்வென் ஜெங்கிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.

2ம் நிலை வீராங்கனையான 25 வயதான பெலாரசின் அரினா சபலென்கா, 6-1, 6-3 என ரஷ்யாவின் டாரியா கசட்கினாவை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார். இந்த வெற்றி மூலம் சபலென்கா முதன்முறையாக தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார். ஆடவர் ஒற்றையரில் நம்பர் ஒன் வீரரான ஸ்பெயினின் அல்காரஸ் 6-3,6-3,6-4 என இத்தாலியின் மேட்டியோ அர்னால்டிசையும், ரஷ்யாவின் ஆண்ட்ரி ரூப்லெவ், 6-3, 3-6, 6-3, 6-4 என இங்கிலாந்தின் ஜாக் டிராப்பரையும் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றனர். 3ம் நிலை வீரரான டேனியல் மெட்வெடேவ், 2-6, 6-4, 6-1, 6-2 என ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை வென்றார்.

 

The post யுஎஸ் ஓபன் டென்னிஸ் மெட்வெடேவ், மார்கெட்டா கால் இறுதிக்கு தகுதி appeared first on Dinakaran.

Tags : US Open Tennis ,Medvedev ,Marchetta ,New York ,Grand Slam ,Marketa ,Dinakaran ,
× RELATED அல்கராஸ் மீண்டும் சாம்பியன்