×

ஒன்றிய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் ஊழல் ரூ.2.32 கோடி, 1 கிலோ தங்கம் பறிமுதல்: ராஜஸ்தானில் அமலாக்கத்துறை ரெய்டு

ஜெய்ப்பூர்: ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்துவதில் முறைகேடு நடந்த புகாரை அடுத்து நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2.32 கோடி ரொக்கம், ரூ. 64 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்க பிஸ்கெட் உள்ளிட்டடை கைப்பற்றப்பட்டன. ஒன்றிய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வீடுகள் தோறும் குடிநீர் வழங்கும் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அந்த வகையில் ராஜஸ்தான் முழுவதும் ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து, பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. குறிப்பாக ஜெய்ப்பூர், அல்வார், நீம்ரானா, பெஹ்ரோர், ஷாபுரா போன்ற நகரங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதில், ரூ.2.32 கோடி ரொக்கம், ரூ. 64 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்க பிஸ்கெட், டிஜிட்டல் சான்றுகள், ஹார்டு டிஸ்க்குகள், மொபைல் சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

முன்னதாக ராஜஸ்தான் மாநில அரசின் ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) பதிவு செய்த எப்ஐஆரின் அடிப்படையில், அமலாக்கத்துறை விரிவான விசாரணை நடத்தி இந்த ரெய்டை நடத்தி உள்ளது. பொது சுகாதாரம் மற்றும் பொறியியல் துறை மூலம் வழங்கப்பட்ட பல்வேறு டெண்டர்களில் நடந்த முறைகேடுகளை மறைத்தல், சட்ட விரோத பாதுகாப்பு, டெண்டர்கள் பெறுதல், முறைகேடுகளை மறைக்க அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் வழங்குதல் போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் அதிகாரிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

 

The post ஒன்றிய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் ஊழல் ரூ.2.32 கோடி, 1 கிலோ தங்கம் பறிமுதல்: ராஜஸ்தானில் அமலாக்கத்துறை ரெய்டு appeared first on Dinakaran.

Tags : Union Government ,Enforcement Department Raidh ,Rajasthan ,Jaipur ,Enforcement Department ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு நடத்தும் நீட் தேர்வில்...