×

2 இருக்கைகளுக்கான டிக்கெட் ரூ.57 லட்சத்துக்கு விற்பனை!: இந்தியா – பாகிஸ்தான் போட்டி டிக்கெட் மறுவிற்பனையில் கொள்ளை லாபம் பார்க்கும் இணையதள நிறுவனங்கள்..!!

டெல்லி: இந்தியா – பாகிஸ்தான் போட்டி டிக்கெட் மறுவிற்பனையில் கொள்ளை லாபம் ஈட்டப்பட்டுள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் ரூ.57 லட்சத்துக்கு விற்கப்படுவதால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எந்த தடங்களும் இல்லாமல் போட்டியை பார்க்கும் வகையில் இருக்கும் 2 இருக்கைகளுக்கான டிக்கெட் ரூ.57 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் நடைபெற உள்ள போட்டிக்கான டிக்கெட்டுகளை மறுவிற்பனை செய்து இணையதள நிறுவனங்கள் கொள்ளை லாபம் பார்க்கின்றன.

அகமதாபாத் மைதானத்தில் உள்ள தென்பகுதி இருக்கைக்கான டிக்கெட்டுகள் அதிகம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மைதானத்தில் இருக்கைகளின் இடத்தை பொருத்து டிக்கெட் விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. வயாகோகோ என்ற இணையதளம் ஏஜென்சிகளிடம் இருந்து டிக்கெட் வாங்கி மறுவிற்பனை செய்கிறது. இதேபோல் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் ஆன்லைன் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெறவுள்ள இந்தியா – ஆஸ்திரேலியா போட்டிக்கான டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியா – ஆஸ்திரேலியா போட்டிக்கான டிக்கெட் ரூ.66 ஆயிரத்தில் இருந்து ரூ.1.66 லட்சம் வரை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தில் பல மணி நேரம் காத்திருந்து 2 டிக்கெட் மட்டுமே வாங்குவதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். அங்கீகரிக்கப்படாத இணையதளத்தில் ஆயிரக்கணக்கான கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.

Tags : India ,Pakistan ,Tournament ,Delhi ,-Pakistan ,World Cup Cricket Series ,Ahmedabat ,Ahmedabad Ground ,
× RELATED மீண்டும் சர்ச்சை கிளம்பியது; சீன...