×

சீனாவின் குறைந்த விலை கார்களுடன் போட்டியிடும் ஐரோப்பா: ஜெர்மனியில் முனிச் நகரில் பிரமாண்ட கார் கண்காட்சி

ஐரோப்பா: மின்சார கார் விற்பனையில் முன்னணியில் இருக்கும் சீனாவை சமாளிக்க ஐரோப்பிய கார் தயாரிப்பாளர்களும் குறைந்த விலையில் மின்சார கார்களை தயாரிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். ஜெர்மனியில் முனிச் நகரில் மின்சார கார்களின் கண்காட்சி நடைபெற்றது. இதில் பல முன்னணி நிறுவனங்களின் மின்சார கார்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த கண்காட்சியில் பங்கேற்ற பிரன்ஸ் கார் தயாரிப்பாளர்கள் மின்சார கார் விற்பனையில் சீனாவை சமாளிக்க தயாராகி வருவதாக தெரிவித்தனர்.

வரும் ஆண்டுகளில் தங்களது மின்சார கார்களின் விலை 20 முதல் 30 விழுக்காடு வரை குறையும் என்று அவர்கள் தெரிவித்தனர். உலகளவில் மின்சார வாகன உற்பத்தியில் சீனா முன்னணியில் விளங்குகிறது. பெரும்பாலும் ஐரோப்பிய சந்தை குறிவைத்து சீன உறுதியாளர்கள் விற்பனையில் ஏறுமுகம் காட்டி வருகின்றனர். சீனாவை சேர்ந்த மின்சார கார் தயாரிப்பு நிறுவனங்களான பிஒய்டி லியோ மற்றும் எக்ஸ்பெங் ஆகியவை நடப்பாண்டின் முதல் 7 மாதங்களில் சுமார் 8 லட்சத்து 20 ஆயிரம் மின்சார வாகனங்களை விற்பனை செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post சீனாவின் குறைந்த விலை கார்களுடன் போட்டியிடும் ஐரோப்பா: ஜெர்மனியில் முனிச் நகரில் பிரமாண்ட கார் கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Europe ,China ,Munich, Germany ,
× RELATED தென் சீன கடலுக்கு பயணம்: 3 இந்திய போர் கப்பல்கள் சிங்கப்பூர் சென்றடைந்தன