×

நாகர்கோவிலில் திக கருத்தரங்கம்

நாகர்கோவில், செப்.5 : குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நரேந்திர தபோல்கர் நினைவுநாள் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்போம் கருத்தரங்கம் நடந்தது. அறிவியல் பிரசாரத்தை செய்ததற்காக படுகொலை செய்யப்பட்ட பகுத்தறிவாளர் டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாளை முன்னிட்டு குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக அறிவியல் மனப்பான்மையை வளர்ப்போம், அறியாமையை நீக்குவோம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சிவதாணு தலைமை வகித்தார். திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் வெற்றிவேந்தன் தொடக்கவுரையாற்றினார். திராவிடர் கழக இலக்கிய அணி செயலாளர் பொன்னுராசன், இலக்கிய ஆய்வாளர் காப்பித்துரை ஆகியோர் கருத்துரையாற்றினர். காப்பாளர் பிரான்சிஸ், திராவிடர் கழக மாவட்ட துணைத்தலைவர் நல்ல பெருமாள், அர்ஜூன் மற்றும் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் பகுத்தறிவாளர்கள் நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கவுரி லங்கேஷ்,கோவிந்த் பன்சாரே ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

The post நாகர்கோவிலில் திக கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Narendra Dabholkar ,Memorial Day ,Kumari District Rationalist Association ,Dinakaran ,
× RELATED வணிக நிறுவனங்களில் குப்பை எடுக்க பணம்...