×

டிவிட்டரை வாங்குவதற்கு முன்பே சிஇஓ பராக் தேவையில்லை என முடிவெடுத்த எலான் மஸ்க்: வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் சுவாரசியம்

வாஷிங்டன்: டெஸ்லா கார் உற்பத்தி நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் உரிமையாளரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு டிவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தினார். எலான் மஸ்க் குறித்த வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை பிரபல எழுத்தாளரான வால்டர் ஐசாக்சன் எழுதியுள்ளார். இந்த புத்தகம் வருகின்ற 12ம் தேதி வெளியிடப்படுகின்றது. இந்நிலையில் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சுவாரசிய தகவல்களை தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

இதில் எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக அப்போதைய டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வாலை சந்தித்துள்ளார். இருவரும் 2022ம் ஆண்டு மார்ச்சில் இரவு உணவில் சந்தித்து கொண்டதாகவும், இரவு உணவிற்கு பிறகு எலான் மஸ்க், ‘‘அகர்வால் நல்ல நபர். டிவிட்டருக்கு தேவையானது நெருப்பை கக்கும் டிராகன். பராக் அல்ல” என்று கூறியதாக புத்தகத்தில் எழுத்தாளர் வால்டர் குறிப்பிட்டுள்ளார். எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கிய பின்னர் அக்டோபரில் பராக் அகர்வாலை சிஇஓ பதவியில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.

The post டிவிட்டரை வாங்குவதற்கு முன்பே சிஇஓ பராக் தேவையில்லை என முடிவெடுத்த எலான் மஸ்க்: வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் சுவாரசியம் appeared first on Dinakaran.

Tags : Elon Musk ,CEO ,Barack ,Twitter ,Washington ,Tesla ,Space X ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா...