×

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருப்பவர்களே… ஜி-20 மாநாட்டை தடுத்து நிறுத்துங்கள்: ஆடியோ வெளியிட்ட காலிஸ்தான் தீவிரவாதி

புதுடெல்லி: காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருப்பவர்களே… டெல்லியில் நடக்கும் ஜி-20 உச்சி மாநாட்டை தடுத்து நிறுத்துங்கள் என்று காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் ஆடியோ வெளியிட்டுள்ளான். டெல்லியில் வரும் 9, 10ம் தேதிகளில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறவுள்ள நிலையில், தடை செய்யப்பட்ட காலிஸ்தான் தீவிரவாத அமைப்பான ‘சீக்கியர்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்’-யின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னு என்பவன் வெளியிட்ட ஆடியோ பதிவில், ‘காஷ்மீர் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறி (பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீர் தீவிரவாதிகள்) டெல்லிக்கு வாருங்கள். டெல்லியில் நடக்கும் ஜி-20 உச்சி மாநாட்டை தடுத்து நிறுத்துங்கள்.

வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்த பிறகு பிரகதி மைதானத்திற்கு (உச்சி மாநாடு நடக்கும் பகுதி) பேரணியாக செல்லுங்கள். டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் காலிஸ்தான் கொடியை ஏற்றுவோம்’ என்று மிரட்டல் விடுத்துள்ளான். இந்த ஆடியோவின் உண்மை தன்மை குறித்து உளவுதுறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வெளிநாட்டில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வரும் குர்பத்வந்த் சிங் பன்னுவை கைது செய்ய ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

The post காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருப்பவர்களே… ஜி-20 மாநாட்டை தடுத்து நிறுத்துங்கள்: ஆடியோ வெளியிட்ட காலிஸ்தான் தீவிரவாதி appeared first on Dinakaran.

Tags : kashmir valley ,g-20 conference ,khalistan ,New Delhi ,G-20 summit ,Delhi ,Kurbatvant ,Dinakaran ,
× RELATED காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாஜக போட்டியிடாதது ஏன்?: உமர் அப்துல்லா கேள்வி