×

திருப்பூர் மாவட்டம் பல்லடம் படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய முதலமைச்சர் உத்தரவு

சென்னை: திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், மாதப்பூர் கிராமம், மஜரா கள்ளக்கிணர் அருகில் குரைதோட்டம் என்ற இடத்தில் நேற்று (3-9-2023) இரவு அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் மது அருந்திவிட்டு புஷ்பவதி, க/பெ.பழனிசாமி (வயது 69), ரத்தினாம்பாள், க/பெ. சுப்பிரமணியம் (வயது 58), செந்தில்குமார், த/பெ.சண்முகம் (வயது 48) மற்றும் மோகன்ராஜ், த/பெ.பழனிசாமி (வயது 45) ஆகியோரை அரிவாளால் வெட்டியதில் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற அதிர்ச்சியான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இக்குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் ஏனைய குற்றவாளிகளையும் செய்ய விரைவில் கைது உத்திரவிட்டுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்திரவிட்டுள்ளேன்.

The post திருப்பூர் மாவட்டம் பல்லடம் படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய முதலமைச்சர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Tiruppur district ,Palladam massacre incident ,Chennai ,Thiruppur District ,Palladam Circle ,Mathapur Village ,Mazara Kallakkinar ,Horaithotam ,Tiruppur District Pallada massacre ,Dinakaran ,
× RELATED விழுப்புரம் புதிய பஸ்நிலையத்தில்...