×

கேலோ இந்தியா மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 134 வீரர் வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகையை வழங்கினார் முதலமைச்சர்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (4.9.2023) தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோலோ இந்தியா மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 134 வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 2 கோடியே 24 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கிடும் அடையாளமாக 10 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி 2022 மத்தியப் பிரதேச மாநிலத்தில் 30.1.2023 முதல் வரை நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும், யூனியன் 11.2.2023 பிரதேசங்களும் கலந்து கொண்டன. கோலோ இந்தியா போட்டியில் ஆண்கள் தடகளப் போட்டியில் 3 தங்கம், 5 வெள்ளிமற்றும் 3 வெண்கலப் பதக்கங்கள் வென்ற 7 வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 13இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும்; ஆண்கள் கூடைப்பந்து போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற 12 வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 9 இலட்சம் ரூபாயும்; ஆண்கள் வாள்வீச்சுப் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற 8 வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 5 இலட்சம் ரூபாயும் ஆண்கள் ஜுடோ போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீரருக்கு உயரிய ஊக்கத் தொகையாக 1 இலட்சம் ரூபாயும்: ஆண்கள் படகுப்போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற 2 வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 1இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும்; ஆண்கள் நீச்சல் போட்டியில் 1 தங்கம், 6 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்களும் வென்ற 4 வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 13 இலட்சம் ரூபாயும் வழங்கினார்.

ஆண்கள் டென்னிஸ் போட்டியில் 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் 1 வெண்கலப் பதக்கங்கள் வென்ற 4
வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 6 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாயும்; ஆண்கள் பளுதூக்கும் போட்டியில் 2 தங்கம் மற்றும் 1 வெள்ளிப் பதக்கங்கள் வென்ற 3 வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும்; ஆண்கள் யோகாசனப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரருக்கு உயரிய ஊக்கத் தொகையாக 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும்;பெண்கள் தடகளப் போட்டியில் 1 தங்கம், 5 வெண்கலப் பதக்கங்கள் வென்ற 6 வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 5 இலட்சம் ரூபாயும்; பெண்கள் இரட்டையர் இறகுப்பந்து போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற 2 வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாயும்; பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு உயரிய ஊக்கத்தொகையாக 1 இலட்சம் ரூபாயும்;

பெண்கள் சைக்கிளிங் போட்டியில் 3 வெள்ளி மற்றும் 1 வெண்கலப் பதக்கங்கள் வென்ற 3 வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 4 இலட்சம் ரூபாயும்; பெண்கள் வாள்வீச்சுப் போட்டியில் 4 வெள்ளி மற்றும் 1 வெண்கலப் பதக்கங்கள் வென்ற 4 வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 4 இலட்சம் ரூபாயும்; பெண்கள் மல்லர் கம்பம் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு உயரிய ஊக்கத் தொகையாக 1 இலட்சம் ரூபாயும்; பெண்கள் படகுப் போட்டியில் வெள்ளிப் பதக்கங்கள் வென்ற 6 வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 5 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாயும்; பெண்கள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு உயரிய ஊக்கத் தொகையாக 2 இலட்சம் ரூபாயும் வழங்கினார்.

பெண்கள் நீச்சல் போட்டியில் 2 தங்கம், 5 வெண்கலப் பதக்கங்கள் வென்ற 4 வீராங்கனைகளுக்கு
உயரிய ஊக்கத் தொகையாக 7 இலட்சம் ரூபாயும்; பெண்கள் வாலிபால் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற 14 வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும்; பெண்கள் பளுதூக்கும் போட்டியில் 3 வெள்ளி மற்றும் 1 வெண்கலப் பதக்கங்கள் வென்ற 4
வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும்;
பெண்கள் யோகாசனப் போட்டியில் 1 தங்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் வென்ற 3
வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும்,
64வது தேசிய துப்பாக்கிச்சுடும் சாம்பியன்ஷிப் போட்டி 2021-ல் 4 தங்கம், 23 வெள்ளி மற்றும் 17
வெண்கலப் பதக்கங்கள் வென்ற 17 வீரர்கள் மற்றும் வீராங்கனைளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 68
இலட்சத்து 25 ஆயிரம் ரூபாயும்;

12-வது தேசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி 2022-ல் 4 தங்கம், 8 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்கள் வென்ற 15 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 23 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும்; தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி 2021-ல் 3 வெண்கலப் பதக்கங்கள் வென்ற 3 வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும்;
தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி 2021 -22ல் 1 தங்கம், 1 வெள்ளி மற்றும் 4 வெண்கலப்
பதக்கங்கள் வென்ற 6வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 13 இலட்சம் ரூபாயும்;
ஆண்டிற்கான சதுரங்க கிராண்ட் பட்டம் மாஸ்டர் வென்ற எம். பிரனேஷ் அவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 5 இலட்சம் ரூபாயும், 2019-ஆம் ஆண்டிற்கான பெண்கள் சர்வதேச சதுரங்க மாஸ்டர் பட்டம் வென்றரக்ஷித்தா ரவி அவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 3 இலட்சம் ரூபாயும்;
2023-ஆம் என மொத்தம் 134 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக மொத்தம் 2 கோடியே 24 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கிடும் அடையாளமாக தமிழ்நாடு முதலமைச்சர் இன்று 10 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் நடைபெற்ற Clay Pigeon Trap தேசிய ஜுனியர் துப்பாக்கி சுடும்
சாம்பியன்ஷிப் போட்டி -2021-ல் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக செல்வி நிலா ராஜா பாலு அவர்கள் தனக்கு வழங்கப்பட்ட உயரிய ஊக்கத்தொகையான 1 இலட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய்க்கான காசோலையை, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்ட சென்னையில் துப்பாக்கிச் சுடும் தளம் அமைக்கும் பணிக்காக, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் வழங்கினார். மேலும், செல்வி நிலா ராஜா பாலு அவர்கள் தில்லியில் நடைபெற்ற 65வது தேசிய துப்பாக்கிச்சுடும் சாம்பியன்ஷிப் போட்டி 2022ல் ஜுனியர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தவர் ஆவார்.

தமிழக விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச அளவிலான போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்றிட தமிழ்நாடு அரசின் ஒலிம்பிக் தங்க வேட்டை திட்டத்தின் கீழ் முதல்முறையாக சர்வதேச அளவில் புகழ்பெற்ற வெளிநாட்டு விளையாட்டு பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு தமிழக விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளனர். அதன்படி தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயிற்சியாளர்கள் – ரோமோனிய நாட்டைச் சேர்ந்த தடகளப் பயிற்சியாளர் பெட்ராஸ் பெட்ரோசியன் (Bedros Bedrosian), டச்சு நாட்டைச் சேர்ந்த ஹாக்கி பயிற்சியாளர் எரிக் வோனிக் (Eric Wonink), அமெரிக்க நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் பயிற்சியாளர் திரு. சஞ்சய் சுந்தரம் ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள்.

இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தமிழ்நாடு கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர். அதுல்ய மிஸ்ரா, ஆணைய உறுப்பினர் செயலர் விளையாட்டு மேம்பாட்டு ஜெ.மேகநாத ரெட்டி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

The post கேலோ இந்தியா மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 134 வீரர் வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகையை வழங்கினார் முதலமைச்சர் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Gelow India ,Nationwide Games ,Chennai ,Tamil Nadu ,G.K. Stalin ,Head Secretariat of Youth Welfare and Sports Development ,Gelo ,India ,National-wide Games ,
× RELATED ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள்...