பந்தலூர், செப்.4 : நீலகிரி மாவட்டம் பந்தலூர் இன்கோ கூட்டுறவு தேயிலைத்தொழிற்சாலையில் 1800க்கும் மேற்பட்ட சிறுகுறு தேயிலை விவசாயிகள் அங்கத்தினர்களாக இருந்து பசுந்தேயிலை வழங்கி வருகின்றனர். இவர்கள் வழங்கும் பசுந்தேயிலைக்கு மாதம் 10ம் தேதிக்குள் இந்திய தேயிலை வாரியம் சார்பில் விலை நிர்ணயம் செய்பட்டு அந்த விலையை சம்மந்தப்பட்ட கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.
பந்தலூர் இன்கோ கூட்டுறவு தேயிலைத்தொழிற்சாலையில் கடந்த மூன்று மாதங்களாக விவசாயிகள் வழங்கிய பசுந்தேயிலைக்கு முன்பணம் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் மீதமுள்ள நிலுவை தொகையை இதுவரை தேயிலை விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் இருந்து வருவது பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதனால் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு தங்களுடைய பசுந்தேயிலையை வழங்காமல் தேயிலை விவசாயிகள் தனியார் தேயிலை தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வழங்கி கூடுதல் விலையை பெற்று வருகின்றனர். எனவே, பந்தலூர் அரசு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் அங்கத்தினர்களாக இருந்து பசுந்தேயிலை வழங்கி வரும் சிறு-குறு தேயிலை விவசயிகளுக்கு தேயிலை வாரியம் நிர்ணயிக்கும் விலையை முறையாக மாதமாதம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post இன்கோ கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் நிலுவை தொகை வழங்காததால் பாதிப்பு appeared first on Dinakaran.
