×

சேலத்தில் பரவலாக மழை

சேலம், செப்.4: சேலம் மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி 31.70 மில்லி மீட்டர் மழை பெய்தது. வட தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, நேற்று கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தில் மலைப்பகுதிகள், தென்காசி, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்தது.

சேலத்தில் மேட்டூர், ஏற்காடு, காடையாம்பட்டி உள்பட பல இடங்களில் மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி மழையளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு: மேட்டூர் 12.20, ஏற்காடு 9, காடையாம்பட்டி 4, ஆணைமடுவு 3, கரியகோவில் 2, இடைப்பாடி 1, சேலம் 0.50 என மொத்தம் 31.70 மில்லிமீட்டர் மழை பதிவானது.

The post சேலத்தில் பரவலாக மழை appeared first on Dinakaran.

Tags : Salem ,North Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மாவட்டத்தில் 85% பேருக்கு விநியோகம்