×

மரத்தில் கார் மோதி 7 பேர் படுகாயம்

மல்லசமுத்திரம், செப்.4: மல்லசமுத்திரம் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில், வங்கி ஊழியர் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். ஈரோடு மாவட்டம், கொடுமுடி பாசூர் பழனியாண்டவர் வீதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(32). தனியார் வங்கியில் கடன் வசூல் மைய மேலாளராக பணியாற்றி வரும் இவர், தனது மனைவி சுஜிதா(24), மகன் செந்தூரன்(3) மற்றும் உறவினர்களான தினேஷ்வரன்(30), சுபாஷினி(26), கலாவதி(56), குணவதி(60) ஆகியோருடன் திருப்பதி சென்றார். பின்னர், அங்கிருந்து காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

நேற்று அதிகாலை, மல்லசமுத்திரம் செம்பாம்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக சாலையோர புளியமரத்தின் மீது கார் மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. காரில் பயணம் செய்த 7 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் தினேஷ்வரன், கலாவதி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து மல்லசமுத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post மரத்தில் கார் மோதி 7 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Mallasamutram ,Erode ,
× RELATED கந்தசாமி கோயிலில் கிருத்திகை வழிபாடு