×

12 ஆண்டுகள் கோமாவில் இருந்த வாலிபர் சாவு

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மன்னார் பருமலை பகுதியைச் சேர்ந்தவர் மேத்யூ ஆன்டனி (37). போட்டோகிராபர். ஸ்டூடியோ நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி இரவு பைக்கில் சென்ற மேத்யூ நாய் குறுக்கே பாய்ந்ததால் கீழே விழுந்து கோமா நிலைக்கு சென்றார் .பல மருத்துவமனைகளில் காண்பித்தும் மேத்யூ ஆன்டனியை கோமா நிலையில் இருந்து மீட்க முடியவில்லை.

இந்தநிலையில் கடந்த 12 வருடங்களாக கோமாவில் இருந்த மேத்யூ ஆன்டனி சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவரது உடல் பருமலையிலுள்ள கிறிஸ்தவ ஆலய கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

The post 12 ஆண்டுகள் கோமாவில் இருந்த வாலிபர் சாவு appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Mathew Anthony ,Mannar Parumalai ,Alappuzha district ,Kerala ,
× RELATED திருவனந்தபுரத்தில் 2 வயது குழந்தை கடத்தல்