புதுடெல்லி: ெடல்லியில் 6 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சக பள்ளி மாணவரை ேபாலீசார் கைது செய்தனர். டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி படித்து வந்தார். சம்பவத்தன்று பள்ளி முடிந்ததும் வழக்கம் போல் சிறுமி பள்ளி பஸ்சில் வீட்டுக்கு சென்றார். பஸ்சில் இருந்து திரும்பிய சிறுமி மிகவும் சோர்வாக இருப்பதை பார்த்து சந்தேகமடைந்த சிறுமியின் தாய் அவளிடம் என்ன நடந்தது? என விசாரித்தார். அப்போது பஸ்சில் வரும்போது சிறுமியை மூத்த மாணவர் ஒருவர், பாலியல் ரீதியில் துன்புறத்திய அதிர்ச்சிகர சம்பவம் தெரியவந்தது.
இது குறித்து சிறுமியின் தாயின் போலீசில் புகார் அளித்தபோதும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து இந்த விவகாரம் டெல்லி மகளிர் ஆணையத்தின் கவனத்துக்கு சென்றது. இதுகுறித்து விளக்கம் கேட்டு ரோகினி நகர போலீஸ் துணை கமிஷனருக்கு நோட்டீஸ் டெல்லி மகளின் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி மாணவனை போலீசார் நேற்று போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சம்பவம் தொடர்பாக அந்த மாணவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post 6 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு: சக பள்ளியின் மாணவர் கைது appeared first on Dinakaran.
