×

புதுக்கோட்டையில் இன்பநிதி புகைப்படத்தை பயன்படுத்தி போஸ்டர் ஒட்டிய திமுக நிர்வாகிகள் 2பேர் சஸ்பெண்ட்: திமுக பொதுச்செயலாளர் உத்தரவு

சென்னை: புதுக்கோட்டையில் இன்பநிதி புகைப்படத்தை பயன்படுத்தி போஸ்டர் ஒட்டிய திமுக நிர்வாகிகள் 2 பேர் சஸ்பெண்ட் செய்துள்ளனர். புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் திருமுருகன்,மணிமாறன் சஸ்பெண்ட் செய்து திமுக பொதுச்செயலாளர் உத்தரவு அளித்துள்ளார்.

இன்பநிதி பெயரில் பாசறை அமைத்து ஒட்டப்பட்ட போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில் புதுக்கோட்டை திமுக நிர்வாகிகள் இரண்டு பேர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி பெயரில் பாசறை அமைக்கப்பட்டதாக புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டிப்பட்டிருந்தது. அதில் எதிர்காலமே மண்ணை பிளக்காமல் விதைகள் முளைப்பதில்லை போராட்ட களமின்றி வெற்றி கிடைப்பதில்லை என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

அத்துடன் இன்பநிதி பாசறை-யின் சார்பில் செப்டம்பர் 24-ந் தேதி மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் எனவும் அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு பெரும் சர்ச்சையானது.

இந்நிலையில் போஸ்டர் வெளியிட்ட புதுக்கோட்டை மாவட்ட திமுக நிர்வாகிகள் மணிமாறன், திருமுருகன் இருவரும் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்துள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தைச்சேர்ந்த மாவட்ட கலை, இலக்கியப் பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் வடவாளம் க.செ.மணிமாறன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மு.க.திருமுருகன் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (Suspension) வைக்கப்படுகிறார்கள். ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post புதுக்கோட்டையில் இன்பநிதி புகைப்படத்தை பயன்படுத்தி போஸ்டர் ஒட்டிய திமுக நிர்வாகிகள் 2பேர் சஸ்பெண்ட்: திமுக பொதுச்செயலாளர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Djagagam ,Infiniti ,Pudukkottai ,Chennai ,Pudukkottu ,Pudukkotta ,North ,Infinity ,General Commissioner ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை...