×

கருப்பசாமி கோயில் சிறப்பு பூஜை

ஆண்டிபட்டி, செப். 3: தேனி, பழனிசெட்டிபட்டி கருப்பசாமி கோயிலில், 184வது உலக புகைப்பட தின விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜையும் உறுப்பினர்களின் நலன் வேண்டி பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் செல்வகுமார் இனிப்புகள் வழங்கியும் மற்றும் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் தேனி புகைப்பட கலைஞர் மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர் நலச் சங்கத்தின் ஆலோசகர் சிவக்குமார், தலைவர் ரஞ்சித், துனைத் தலைவர் பரமேஸ்வரன், செயலாளர் காளிதாஸ், பொருளாளர் சிவமூர்த்தி துணை செயலாளர் ராஜா செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post கருப்பசாமி கோயில் சிறப்பு பூஜை appeared first on Dinakaran.

Tags : Karuppasamy ,temple ,Antipatti ,Theni ,Palanisettipatti ,Karuppasamy Temple ,184th World Photography Day ,
× RELATED ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழாவில்...