ராமநாதபுரம், செப்.3: ராமநாதபுரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் அலுவலக கட்டுமான பணிகளை எம்எல்ஏ ஆய்வு செய்தார். ராமநாதபுரத்தில் சேதமடைந்த பழைய யூனியன் அலுவலகம் கட்டிடம் அகற்றப்பட்டு ரூ.3 கோடியே 62 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணி கடந்தாண்டு துவங்கப்பட்டது. தற்போதைய கட்டுமானப் பணிகள் மற்றும் தரத்தை திருவாடானை எம்எல்ஏ கருமாணிக்கம், யூனியன் சேர்மன் பிரபாகரன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. பணிகள் நிறைவுற்றவுடன் விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆய்வின் போது துணை சேர்மன் ராஜவேனி பார்த்தசாரதி, பிடிஓகள் ரமேஷ்குமார், சேவுகப் பெருமாள், உதவி பொறியாளர் அர்ச்சுணன், ஒன்றிய கவுன்சிலர் கார்த்திக்பாண்டி, வட்டார காங்கிரஸ் தலைவர் சேகர், நகராட்சி கவுன்சிலர் ராஜராம்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post யூனியன் அலுவலககட்டுமான பணிகள் ஆய்வு appeared first on Dinakaran.
