×

திண்டுக்கல் பகுதியில் உள்ளவேலுநாச்சியார் பூங்காவை பராமரிக்க வேண்டும்:பொதுமக்கள் கோரிக்கை

திண்டுக்கல், செப். 3: திண்டுக்கல் ஐந்தாவது வார்டு பாலாஜி நகரில் உள்ள பூங்கா சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இதனை மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டு பாலாஜி நகர் 1 வது தெருவில் உள்ள வேலுநாச்சியார் பூங்கா உள்ளது. அப்பகுதி மக்கள் தினம் தோறும் நடைப் பயிற்சி மற்றும் சிறுவர்கள் காலை, மாலை வேலைகளில் விளையாடி பொழுது போக்கி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக பூங்காவில் உள்ள பொருட்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத சூழ்நிலை இருந்தது. மேலும் அங்கிருந்த பொருட்கள் காணாமல் போயின.சில விளையாட்டுப் பொருட்கள் பயன்படுத்தாமல் துருப்பிடித்து போனது.

அங்கு சேரும் குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு துர்நாற்றமும் வீசுகிறது. இதனை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்: பூங்கா பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. மேலும் மது அருந்தும் இடமாகவும், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் இடமாகவும் மாறி உள்ளது. இதனால் இப்பகுதியில் குடியிருக்க கூடிய பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் புதர் மண்டி கிடப்பதால் விஷ ஜந்துகள் ஏராளமானவை உலா வருகின்றன மேலும் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கும் செல்கிறது. எனவே பாழடைந்து பயனற்று கிடக்கும் இந்த பூங்காவை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

 

The post திண்டுக்கல் பகுதியில் உள்ளவேலுநாச்சியார் பூங்காவை பராமரிக்க வேண்டும்:பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Velunachiyar Park ,Dindigul ,Balaji Nagar ,Fifth Ward ,Dinakaran ,
× RELATED முறையாக கவனிக்காமல் கைவிட்டுச் சென்ற...