×

பச்சைமலைபகுதியில்கொட்டித்தீர்த்த மழை

பெரம்பலூர்,செப்.3: பச்சைமலை பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையால் விசுவக்குடி அணைக்கு 10 கனஅடி நீர்வரத்து அதிகரித்துள்ளது.தமிழக அளவில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இரவு பகல் மாறி மாறி பல் வேறுஇடங்களில் பரவலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையாக விளங்கி வரும் பச்சைமலை மீது கனமழை கொட்டித்தீர்த்ததால் பச்சை மலையில் இருந்து உற்பத்தியாகி வரும் கல்லாற்றிலும் காட்டாற்றிலும் மழைநீர் பெருக்கெடுத்து சென்றது. இதன் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத்தலமாக விளங்கி வரும் விசுவக்குடி கல்லாறு அணைக்கட்டுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் அணையின் நீர்மட்டம் சிறிது சிறிதாக உயர்ந்து வருகிறது. தொடர்ந்து ஒரு வாரத்திற்கு நல்ல மழை பெய்தால் விசுவக்குடி அணைக்கட்டு நிரம்பி சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கும். நீர்வள ஆதாரத் துறைமூலம் வெங்கலம் ஏரிக்கான பாசன நீரும் திறந்து விட வாய்ப்புகள் உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

33.90 அடி உயரம் கொண்ட விசுவக்குடி அணைக் கட்டில் நேற்றைய நிலவரப்படி 18.69 அடி உயரத்திற்கு, அதாவது 43.42 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட விசுவக்குடி அணையில் 16.73 மில்லியன் கன அடி தண்ணீர் நிரம்பி உள்ளது. ஆணைக்கு நிமிடத்திற்கு 10 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. விசுவக்குடி அணைக்கு தண்ணீர் வரத்து உள்ளதாலும் விடுமுறை நாளென்பதாலும் நேற்றும், இன்றும் விசுவக்குடி மற்றும் சுற்றியுள்ள அன்னமங்கலம், பிள்ளையார் பாளையம், முகமதுபட்டிணம், தொண்ட மாந்துறை, தழுதாழை, அரும்பாவூர், அமேட்டூர், வேப்பந்தட்டை, அரசலூர், ஈச்சங்காடு, கிருஷ்ணா புரம், வெங்கலம், பெரம்பலூர் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலா ஆர்வலர்கள் கார்களில் குடும்பங்களாகவும், பைக்குகளிலும் வந்து சுற்றிப் பார்த்து மகிழ்ந்து செல்லுகின்றனர்.

The post பச்சைமலைபகுதியில்கொட்டித்தீர்த்த மழை appeared first on Dinakaran.

Tags : Pachamalai ,Perambalur ,Vishwakudi Dam ,Tamil Nadu ,
× RELATED டெல்டா மாவட்டங்களில் 4வது நாளாக மழை;...