×

கிரேனில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

ஆத்தூர், செப்.3: ஆத்தூர் அருகே களரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் தூர்வாரும் பணியில், நேற்று களரம்பட்டி காலனியைச் சேர்ந்த 4 கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். மதியம் உணவு சாப்பிடுவதற்காக, கிணற்றில் இறக்கப்பட்டு இருந்த கிரேன் மூலம், மேலே ஒவ்வொருவராக வந்தனர். கடைசியாக ராக்கெட் என்கிற ராஜா(42) என்பவர் வரும்போது, கிரேனில் கட்டப்பட்டிருந்த கூடை கம்பி வளைந்ததால், நிலை தடுமாறிய ராஜா, 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மல்லியகரை போலீசார், ராஜாவின் உடலை மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post கிரேனில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Athur ,Kalarambatti ,Dinakaran ,
× RELATED மாவட்டத்தில் 85% பேருக்கு விநியோகம்