×

கந்தன்குடி மாரியம்மன் கோயில் அருகே கோழி சண்டை நடத்திய 6 பேர் மீது வழக்கு

குளித்தலை, செப்.3: கந்தன்குடி மாரியம்மன் கோயில் அருகே கோழிச்சண்டை நடத்திய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கந்தன்குடி மாரியம்மன் கோவில் அருகே உள்ள சீதக்காடு பகுதியில் பந்தயம் வைத்து கோழி சண்டை நடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அப்பகுதிக்குச் சென்ற போலீசார் கோழி சண்டை நடத்திய பாம்பனூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் (40), பாதிரிப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் (35), இரும்புதிப் பட்டியைச் சேர்ந்த அண்ணாவி (47), சுரேஷ் (26), குளித்தலையை சேர்ந்த சிலம்பரசன் (31), மருதூரை சேர்ந்த லோகேஷ் (29) ஆகிய 6 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post கந்தன்குடி மாரியம்மன் கோயில் அருகே கோழி சண்டை நடத்திய 6 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Kandankudi Mariamman Temple ,Kulithlai ,Karur ,
× RELATED கரூர், திருச்சி பைபாஸ் பகுதியில் கனரக வாகனங்களை நிறுத்தக்கூடாது