×

அதிமுக ஆலோசனை கூட்டம் 10ம் தேதிக்கு மாற்றம்: தலைமை கழகம் அறிவிப்பு

சென்னை: அதிமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: அதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழினிசாமி தலைமையில் எம்.ஜி.ஆர் மாளிகையில் வரும் 4ம் தேதி (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெறுவதாக இருந்த ஆலோசனை கூட்டம் தேதி மாற்றப்பட்டு வரும் 10ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறும்.

மேலும் 10ம் தேதி நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டுக் குழுவினர்கள் ஆகிய அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

The post அதிமுக ஆலோசனை கூட்டம் 10ம் தேதிக்கு மாற்றம்: தலைமை கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Chief League ,Chennai ,General ,Assembly Opposition Leader ,Edappadi Palinisamy ,MGR House ,
× RELATED யாருமே கண்டு கொள்ளாததால் விரக்தி கோயில் கோயிலாக சுற்றும் ஓபிஎஸ்