×

38 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் டெபாசிட்: புதுவை முதல்வர் வழங்கினார்

புதுச்சேரி: புதுவையில் 38 பெண் குழந்தைகளுக்கு வங்கி கணக்கில் தலா ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்து அதற்கான வங்கி கணக்கு புத்தகத்தை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் முதல்வரின் பெண் குழந்தைகளுக்கான பொருளாதார ஆதரவு மற்றும் அதிகாரம் அளித்தல் என்ற திட்டத்தை முதல்வர் ரங்கசாமி கடந்த சட்டமன்ற கூட்டத்தில் அறிவித்தார். அதன்படி, முதற்கட்டமாக கடந்த மார்ச் மாதம் 17ம் தேதிக்கு பிறகு பிறந்த 38 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.50,000 வீதம் ரூ.19 லட்சம் சுகன்யா சம்ரிதி (செல்வமகள்) திட்டத்தின் கீழ் கணக்கு துவக்கப்பட்டு வைப்பு நிதியாக வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது. வங்கி கணக்கு புத்தகத்தை நேற்று முதல்வர் ரங்கசாமி வழங்கினார். வறுமை கோட்டிற்கு கீழ் 21 முதல் 55 வயதிற்குட்பட்ட, அரசிடமிருந்து வேறு எந்த மாதாந்திர நிதி உதவியையும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக தட்டாஞ்சாவடி தொகுதியை சேர்ந்த 300 பேர், மங்கலம் தொகுதியை சேர்ந்த 1,300 என 1,600 பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

The post 38 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் டெபாசிட்: புதுவை முதல்வர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Puduwa ,Chief Minister ,Puducherry ,Puduvai ,Dinakaran ,
× RELATED இந்தாண்டுக்கான பெரியார் விருது...