×

வங்கி பண மோசடி வழக்கில் கைது: ஜெட் ஏர்வேஸ் நிறுவனருக்கு செப்.11 வரை காவல்

மும்பை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல்(74) தேசிய மயமாக்கப்பட்ட கனரா வங்கியில் இருந்து ரூ.848.86 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். இதில் ரூ.538.62 கோடியை திருப்பி செலுத்தாமல் நரேஷ் கோயல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. நரேஷ் கோயலிடம் நேற்று முன்தினம்(செப்.1) விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அவரை கைது செய்தனர். தொடர்ந்து சிறப்பு நீதிமன்றத்தில் நரேஷ் கோயல் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அமலாக்கத்துறை அதிகாரிகள், நரேஷ் கோயல் வங்கிகளில் இருந்து கடனாக பெற்ற ரூ.1000 கோடி பணத்தை நகைகள், அலங்கார வீட்டு உபயோக பொருட்கள், அறைகலன்கள் போன்றவற்றை வாங்கவும், தான் வசித்த குடியிருப்பு ஊழியர்களின் மாத ஊதியம் தரவும், தன் மகள் நடத்தும் நிறுவனத்தின் செலவுகளுக்கும் தவறாக பயன்படுத்தி உள்ளார். மேலும் துபாய், அயர்லாந்து, பிரிட்டனின் விர்ஜின் தீவு உள்ளிட்ட வரி குறைவான நாடுகளில் பல்வேறு வகைகளில் முதலீடு செய்துள்ளதாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து நரேஷ் கோயலை செப்டம்பர் 11 வரை அமலாக்கத்துறை காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post வங்கி பண மோசடி வழக்கில் கைது: ஜெட் ஏர்வேஸ் நிறுவனருக்கு செப்.11 வரை காவல் appeared first on Dinakaran.

Tags : Jet Airways ,Mumbai ,Naresh Goyal ,Canara Bank ,Dinakaran ,
× RELATED ஜெட் ஏர்வேஸ் நிறுவனருக்கு இடைக்கால ஜாமின்..!!