×

கோயில் திருவிழா ஆடல், பாடல் நிகழ்ச்சியில் தகராறு விவசாயி கொலை

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பெருநாழியில் நிறைகுளத்து வள்ளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை பார்க்க பொந்தம்புளி கிராமத்தை சேர்ந்த முத்துராமலிங்கம்(38), இடிவிலகி விவசாயி முனியசாமி(40), இதயராஜா(35) ஆகியோர் சென்றனர். இவர்கள் ஆடல், பாடல் நிகழ்ச்சியின் இடையே ஆரவாரம் செய்ததால், பெருநாழியை சேர்ந்த அஜய் (23), சரவணன்(28), ஓம்பிரகாஷ் (22) உட்பட 7 பேருடன் வாக்குவாதம், தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் அரிவாள் மற்றும் ஆயுதங்களுடன் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் விவசாயி முனியசாமி அரிவாளால் வெட்டப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

The post கோயில் திருவிழா ஆடல், பாடல் நிகழ்ச்சியில் தகராறு விவசாயி கொலை appeared first on Dinakaran.

Tags : Niraikulattu Valliamman temple festival ,Perunazhi ,Kamudi, Ramanathapuram district ,
× RELATED அண்ணாமலை வெத்துவேட்டு காலி பெருங்காய டப்பா…உதயகுமார் செம அட்டாக்