×

ஆதித்யா எல்1 விண்கல திட்ட இயக்குநர் தென்காசி நிகர் ஷாஜிக்கு வாழ்த்துகள்: கனிமொழி எம்பி டிவிட்

சென்னை: திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சூரியன் குறித்த ஆய்வுகளுக்காக, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருக்கும் ஆதித்யா எல்1 விண்கல திட்ட இயக்குநர், தென்காசியைச் சேர்ந்த நிகர் ஷாஜிக்கு வாழ்த்துகள். நம் நாட்டின் விண்வெளி துறைசார் பயணத்தில், பெரியதொரு மைல்கல்லாக இருக்கும் இந்த ஆய்வுத் திட்டத்தைத் திறம்பட வழிநடத்திவரும் அவரது பணிகள் வெற்றி பெற வாழ்த்துகள். சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் முதல் முயற்சியான ஆதித்யா எல்1 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டு, புவி சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. விண்வெளி அறிவியலில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கும் இஸ்ரோவிற்கு எனது வாழ்த்துகள். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post ஆதித்யா எல்1 விண்கல திட்ட இயக்குநர் தென்காசி நிகர் ஷாஜிக்கு வாழ்த்துகள்: கனிமொழி எம்பி டிவிட் appeared first on Dinakaran.

Tags : Thenkasi Nigar Shaji ,Kanimozhi ,Dvt ,Chennai ,DMK ,Deputy General Secretary ,Sun ,Aditya ,
× RELATED நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல்;...