×

சிறுவளூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்

 

அரியலூர், செப்.2: அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு பள்ளிகளில் மேலாண்மைக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கூட்டத்துக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். கூட்டத்துக்கு அப்பள்ளி மேலாண்மைக்குழு துணை தலைவர் ரேவதி, உறுப்பினர் மங்கையர்கரசி, வார்டு உறுப்பினர் பூங்காவனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து முயற்சிக்க வேண்டும்.

மாணவர்களுக்கு கழிப்பறை வசதி, குடிநீர், பள்ளி வளாகத்தூய்மை ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்கள் மாணவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அனைத்து பெற்றோர்களிடமும் உறுப்பினர்கள் விளக்கிக் கூறினர். இதை தொடர்ந்து முதல் பருவத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு துணிப்பையை வழங்கி பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் சிறப்பித்தனர். முன்னதாக ஆசிரியர் தனலட்சுமி வரவேற்றார். முடிவில் ஆசிரியர் செந்தில்குமரன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் கோகிலா, தங்கபாண்டி, இளநிலை உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.

The post சிறுவளூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : School Management Committee ,Siruvalur Government High School ,Ariyalur ,Management Committee ,Dinakaran ,
× RELATED குளத்தூர் அரசு பள்ளியில் பிளஸ் 2...