×

சென்னை துறைமுகம் சாதனை ஒரேநாளில் 19,906 டன் ஸ்டீல் இறக்குமதி

சென்னை: சென்னை துறைமுகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரேநாளில் 19,906 டன் ஸ்டீல் இறக்குமதி செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை துறைமுகம் செயலாளர் வெளியிட்ட அறிக்கை: கடந்த ஆக.31ம் தேதி சென்னை துறைமுகம் இதுவரை இல்லாத அளவில் ஒரேநாளில் 19,906 டன் ஸ்டீல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த ஜனவரி 31ம் தேதி 14,993 டன் இறக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்த நிலையில் தற்போது அதை தாண்டி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனையை செய்து முடித்த இறக்குமதி நிறுவனங்கள், இறக்குமதியாளர்கள், மற்றும் துறைமுக அதிகார்களுக்கு சென்னை துறைமுக தலைவர் பாராட்டு தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சென்னை துறைமுகம் சாதனை ஒரேநாளில் 19,906 டன் ஸ்டீல் இறக்குமதி appeared first on Dinakaran.

Tags : Chennai ,port ,Chennai Port ,Dinakaran ,
× RELATED கேரளாவிலும் மீன்பிடி தடைகாலம்...