×

தினைப் பணியாரம்

தேவையானவை

தினை மாவு – 2 கப்,
இட்லி மாவு – 1 கப்,
தேங்காய்த்துருவல் – 2 டீஸ்பூன்,
ஏலப்பொடி – ஒரு சிட்டிகை
பொடிந்த கருப்பட்டி – 200 கிராம்
எண்ணெய் அல்லது நெய் –
தேவைக்கேற்ப.

செய்முறை

முதலில் பொடித்த கருப்பட்டி, தினை மாவு, இட்லி மாவு, தேங்காய்த்துருவல், ஏலப்பொடி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக கரைக்கவும். குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி மிதமான தீயில் வைத்து நெய் தடவி மாவை ஊற்றி பணியாரமாக சுட்டு எடுத்து பரிமாறவும்.

 

The post தினைப் பணியாரம் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED முகப்பருக்கள் உணர்த்தும் பிரச்னைகள்!