×

இந்தியா ஒரு போருக்குத் தயாராகிறது; அந்தப் போரில் நாங்கள் இந்தியாவிற்காக நிற்கிறோம்: கார்கே பேச்சு

மும்பை: இந்தியா ஒரு போருக்குத் தயாராகிறது; அந்தப் போரில் நாங்கள் இந்தியாவிற்காக நிற்கிறோம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 3வது ஆலோசனை கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கியது.  இந்த ஆலோசனை கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில் 2வது நாளாக நடைபெறும்  I.N.D.I.A கூட்டணிக்கு 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் இந்தியா கூட்டணி தலைவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது பேசிய கார்கே, தேர்தல் வரும்போதெல்லாம் விலை குறைப்பு மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் பிரதமர் மோடி. சிலிண்டர் விலையை ரூ.1,000வரை உயர்த்திவிட்டு ரூ.200 மட்டும்குறைத்து நாடகமாடுகின்றனர். விலைவாசியை குறைப்பது, வேலையின்மையை நீக்குவதே எங்கள் நோக்கம். புலனாய்வு அமைப்புகளை கொண்டு எதிர்க்கட்சிகளை ஒன்றிய அரசு மிரட்டி வருகிறது. விலைவாசி உயர்வைக் கண்டித்து மாநிலம் தோறும் போராட்டங்கள் நடத்தப்படும். பாஜக அரசுக்கு எளியோர் மீது அக்கறையில்லை; பணக்காரர்களைப் பற்றியே கவலை கொள்கிறது. ஊழலை ஒழிப்பதைப் பற்றி பேசும் பாஜகதான் மிகப்பெரிய ஊழலை செய்து வருகிறது.இவ்வாறு தெரிவித்தார் .

 

The post இந்தியா ஒரு போருக்குத் தயாராகிறது; அந்தப் போரில் நாங்கள் இந்தியாவிற்காக நிற்கிறோம்: கார்கே பேச்சு appeared first on Dinakaran.

Tags : India ,Karke ,Mumbai ,Congress ,Mallikarjun Karke ,
× RELATED இந்தியா கூட்டணியில் இருந்து விலகாததால் சோரன் கைது: கார்கே பேச்சு