×

மும்பையில் நடைபெற்று வரும் I.N.D.I.A கூட்டணியின் 2-வது நாள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்..!!

மும்பை: மும்பையில் நடைபெற்று வரும் I.N.D.I.A கூட்டணியின் 2-வது நாள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 3வது ஆலோசனை கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றனர். இதனிடையே கூட்டணியில் மேலும் 9 கட்சிகள் சேர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் 2வது நாளாக நடைபெறும் ‘I.N.D.I.A ’ கூட்டணிக்கான இலச்சினை வெளியிடப்பட உள்ளது. மேலும், I.N.D.I.A கூட்டணிக்கு 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

*I.N.D.I.A கூட்டணி கட்சிகள் சார்பில் மாநிலங்களில் தொகுதிப் பங்கீடு உடனடியாக தொடங்கப்படும்.

*விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் தொகுதிப் பங்கீடு நடத்தி முடிக்கப்படும்.

*அடுத்து வரும் தேர்தல்களையும் இணைந்து சந்திக்க I.N.D.I.A கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு.

* நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக இணைந்து சந்திக்க I.N.D.I.A கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்.

*முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை பல்வேறு பகுதிகளில் பொதுக்கூட்டம் நடத்தி எடுத்துரைக்கவும் முடிவு.

*தகவல் தொடர்பு, ஊடக உத்திகள் மூலம் பரப்புரைகளை ஒருங்கிணைக்கவும் I.N.D.I.A கூட்டணி கட்சிகள் தீர்மானம்.

The post மும்பையில் நடைபெற்று வரும் I.N.D.I.A கூட்டணியின் 2-வது நாள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்..!! appeared first on Dinakaran.

Tags : INDIA Alliance ,Mumbai ,Dinakaran ,
× RELATED I.N.D.I.A. கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமர் மோடி