×

அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது: இந்தியில் குற்றவியல் சட்டங்களின் பெயரை மாற்ற தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் எதிர்ப்பு..!!

சென்னை: இந்தியில் குற்றவியல் சட்டங்களின் பெயரை மாற்ற தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றின் பெயர்களை சமஸ்கிருத மொழியிலும் இந்தி மொழியிலும் மாற்றம் செய்வதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ள ஒன்றிய அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தமிழக வக்கீல்கள் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஒன்றிய அரசு மறைமுகமாக இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கும் விதமாக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது கண்டனத்துக்குரியது.

இந்த சட்ட மசோதாவை திரும்பப் பெறும் வரை எங்களது போராட்டம் ஓயாது என்று கூறியுள்ளனர். இந்த நிலையில், இந்தியில் குற்றவியல் சட்டங்களின் பெயரை மாற்ற தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரலாம், மாற்ற வேண்டிய அவசியமில்லை என பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக பார் கவுன்சிலிடம் கருத்து கேட்டார்களே தவிர, பெயரை மாற்ற எந்த கருத்தும் கேட்கவில்லை.

இந்திய சட்டங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டப் பிரிவு 348 திட்டவட்டமாக கூறுகிறது. சட்டங்களின் பெயரை உடனடியாக மாற்றினால் நீதித்துறை சீர்குலைந்துவிடும். நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் அனைத்து சட்ட மசோதாக்களும் ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டும். இந்தியில் பெயர் வைத்துள்ளார்கள். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என தெரிவித்தார்.

The post அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது: இந்தியில் குற்றவியல் சட்டங்களின் பெயரை மாற்ற தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் எதிர்ப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Puducherry Bar Council ,Chennai ,Dinakaran ,
× RELATED நீதித்துறை விடுமுறைகள் குறித்து...