×

சந்திரயான்-3 சாதனைப் பயணத்தில் தமிழக நிறுவனத்தின் பங்கு: லேண்டர், ரோவரில் தமிழ்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள்

திருசெந்தூர்: தமிழ்நாட்டில் திருசெந்தூர் அருகே உள்ள நாசரேத் ஆர்ட் தொழிற்பயிற்சி மையத்தில் செய்யப்பட்ட உதிரிபாகங்கள் தற்போது ஆய்வு செய்து வரும் லேண்டர் மற்றும் ரோவரில் பொருத்தப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி நாசரேத் மணடலத்தின் கீழ் செயலாற்றிவரும் ஆர்ட் தொழிற்பயிற்சி மையத்தில் கடந்த 38 ஆண்டுகளாக விண்வெளி உபகரணங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

மைக்ரான் அளவுகளில் எந்திரங்கள் தயாரிக்கப்பட்டு தர கட்டுப்பாட்டு துறையில் நுண்ணிய முறையில் அளவீடு செய்யப்பட்டு இங்கு உதிரிபாகங்கள் உருவாக்கப்படுகின்றன. நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக ஆய்வுகளை மேற்கொண்டுள்ள சந்திரயான்-3 விண்களத்தின் விக்ரம் லேண்டர் மற்றும் பிரகியான் ரோவரில் பொருத்தப்பட்டுள்ள சில உதிரி பாகங்கள் நாசரேத் தொழிற்பயிற்சி மையத்தில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இங்கு தயாரிக்கப்பட்ட லேசர் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய எல்.பி.ஜி பிளேட் மற்றும் உதிரி பாகங்கள் லேண்டர் மற்றும் ரோவரில் பொருத்தப்பட்டுள்ளன.

இதை திருசெந்தூர் நாசரேத் அட்வான்ஸ் ட்ரைன்னிங் சென்டர் ஊழியர்களால் தயாரிக்கப்பட்டவை ஆகும். 1983,84ம் ஆண்டு முதல் பல்வேறு வகையான ராக்கெட்டுகளுக்கு தேவையான உதிரிபாகங்கள் நாசரேத் தொழிற்பயிற்சி மையத்தில் தயாரிக்கப்பட்டு இஸ்ரோவுக்கு அனுப்பிவைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். சந்திரயான்-3 சாதனைப் திட்டத்தில் தாங்களும் பங்கேற்றிருப்பது பெருமகிழ்ச்சி ஏற்படுத்தி இருப்பதாக நாசரேத் தொழிற்பயிற்சி நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர்.

The post சந்திரயான்-3 சாதனைப் பயணத்தில் தமிழக நிறுவனத்தின் பங்கு: லேண்டர், ரோவரில் தமிழ்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chandrayaan ,Lander ,Rover ,Thirusendur ,Nazareth Art Vocational Training Centre ,
× RELATED ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான...