திருவண்ணாமலை: நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் நினைவு தினத்தையொட்டி, திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் அனிதாவின் உருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் அனிதாவின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றதால், தனது கனவான மருத்துவக் கல்வி படிப்பது சாத்தியமாகவில்லை என்ற கவலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி மாணவி அனிதா தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டார்.
The post நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் நினைவு தினத்தையொட்டி மலர்தூவி அஞ்சலி செலுத்திய கல்லூரி மாணவர்கள் appeared first on Dinakaran.

